வளர்ந்துட்டா எல்லாம் மாறிடுவாங்க..சூரி உதவியே பண்ணல்!! கொட்டாச்சி காட்டம்..
வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சூரியாக காமெடி காட்சியில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகர் சூரி. காமெடி நடிகராக இருந்து தற்போது மாஸ் நாயகனாக திகழ்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

விடுதலை, விடுதலை 2, கருடன், மாமன் என பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது மண்டாடி படத்திலும் நடித்து வருகிறார் சூரி.
கொட்டாச்சி
இந்நிலையில் சூரி தங்களுக்கு உதவுவதில்லை என்று கூறி அவருடன் பழகிய நண்பர்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதில் பூ காய் கனி படத்தினை இயக்கிய இயக்குநர் வெற்றிவீரன், சூரி எந்த உதவியும் செய்யவில்லை என்றும் வெளியே மட்டும் நண்பர்களுக்கு உதவுவதாக பொய் பேசுகிறார் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதனைதொடர்ந்து நடிகர் கொட்டாச்சி, சினிமாவில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்திலிருந்து அவர் எனக்கு நல்லாவே தெரிந்த நண்பர் தான். நானும் அவரும் ஒரே கல்யாண மண்டபத்துல எல்லாம் வேலை பார்த்திருக்கிறோம். ஒரே ரூம் மேட்டாகவும் இருந்திருக்கிறோம். இன்னைக்கு சூரி ஒரு பெரிய நடிகராக மாறியிருப்பது சந்தோஷம் தான்.
ஆனால் ஒரு புரமோஷன் பண்ணச் சொல்லி இப்போது கேட்டால் அதைக்கூட பண்ணித்தரவில்லை. உனக்கு பண்ணிக் கொடுத்தால், பின்னாடி வெற்றிமாறன் சார் உதவி இயக்குநர்கள் எல்லாம் லைனா படம் பண்ண வரும்போது, இதையே கேட்பாங்கன்னு சொல்லி மறுத்துவிட்டார் என்று கொட்டாச்சி தெரிவித்திருக்கிறார்.