ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு வயித்துல எட்டி உதைச்சிட்டேன்.. ரகசியத்தை உடைத்த கோவை சரளா
நடிகை மனோரமா ஆச்சிக்குப் பின் காமெடியில் கலக்கி ரசிகர்களின் மனதில் தனக்கு ஒரு இடம் பிடித்து இருக்கிறார் நடிகை கோவை சரளா.
நடிகர் வடிவேலு, கோவை சரளா காம்போவில் வெளிவந்த காமெடி காட்சிகள் இன்றளவும் மக்களால் ரசிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் வடிவேலுவை அடித்து துவைத்தது சும்மா நொங்கு நொங்கு எடுக்கும் காட்சிகள் நாம் பார்த்து இருப்போம்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கோவை சரளா, வடிவேலுடன் சேர்ந்து பணியாற்றியது குறித்து பேசினார். அதில் அவர், நானும் வடிவேலு சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் பேசப்பட காரணம் நாங்கள் போட்டிபோட்டு நடிப்போம்.
ஒரு முறை சண்டை காட்சியில் நடிக்கும் போது வடிவேலுவின் வயிற்றில் எட்டி உதைச்சிட்டேன். என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களே என்றார். அதன் பின்னர் நடிக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக பக்குவமாக நடிக்க ஆரம்பித்தார் என்று கோவை சரளா தெரிவித்துள்ளார்.