குக் வித் கோமாளி பிரபலம் புகழின் தந்தை மரணம்!! அவரின் உருக்கமான பதிவு...
KPY புகழ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் சீசன் 6ல் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் KPY புகழ். இதனையடுத்து குக் வித் கோமாளி சீசன் 1 முதல் 6 வரை கோமாளியாக பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் பிரபலமாக மாறினார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு புகழும் ஒரு காரணமாக மாறினார். இதனையடுத்து வெள்ளித்திரை படங்களிலும் நடித்து வருகிறார்.

முக்கியமாக, வலிமை, எதற்கும் துணிந்தவன், யானை, ஆகஸ்ட் 16 19947, தேசிங்கு ராஜா 2 போன்ர படங்களில் நடித்து வந்தார். Mr Zoo Keeper என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகினார் புகழ்.
தந்தை மரணம்
இந்நிலையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் புகழுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது விஜய் டிவி புகழின் தந்தை இன்று மரணமடைந்துள்ளார்.
இந்த தகவலை புகழ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அப்பா என் கிட்ட சொல்லாமல் எங்கயும் போக மாட்ட, தெய்வமே இப்படி சொல்லாமல் போய்ட்டியே என்று உருக்கமாக பதிவினை பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை புகழுக்கு தெரிவித்து வருகிறார்கள்.