எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி என முன்னணி நடிகையின் பரிதாப நிலை.. கடைசியாக சன் டிவி சீரியலில் கெஸ்ட் ரோல்

serial sun tv anbe vaa kr vijaya
By Kathick Oct 25, 2021 12:15 PM GMT
Kathick

Kathick

Report

சீரியல்களில் அவ்வப்போது முக்கிய பிரபலங்களை வைத்து சில கெஸ்ட் காட்சிகளை எடுத்து சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தி கொள்வர். அந்த வகையில் தற்போது அன்பே வா சீரியலில் பிரபல 60’ஸ் நடிகை கே.ஆர் விஜயா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ரசிகர்கள் மத்தியில் அன்று முதல் இன்று வரை பிரபலமான நடிகைகளில் கேஆர் விஜயாவும் ஒருவராவார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடம், காதல் மன்னன் ஜெமினி கணேசனுடனும் நடிகை கேஆர் விஜயா இணைந்து நடித்துள்ளார். அத்துடன் நடிகர் முத்துராமன், நடிகர் ஜெய்சங்கர் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தனது நடிப்பு திறமையால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ள நடிகை கேஆர் விஜயா. தற்போது அன்பே வா நாடகத்தில் கதாநாயகனுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது கணவரை காப்பாற்ற கோரி கதாநாயகி கோவிலுக்கு சென்று தெய்வத்திடம் வேண்டுகிறார். இது போன்ற காட்சிகளுடன் அன்பே வா சீரியல் நகர்ந்து வருகிறது. இதில் கதாநாயகிக்கு பதில் அளிக்கும் அம்மனாக அன்பே வா சீரியலில் களமிறங்குகிறார் நடிகை கேஆர் விஜயா.