40 வயது நடிகையை திருமணம் செய்த 50 வயது இயக்குநர்.. கேரளாவில் நடந்த ரகசிய மேரேஜ்..
கிறிஸ் வேணுகோபால் - திவ்யா ஸ்ரீதர்
காதலுக்கு வயது பெரிய விஷயம் இல்லை என்று கூறுவது போல், மலையாள சின்னத்திரையில் வயதை மீறி ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
நடிகரும் இயக்குநருமான கிறிஸ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் இருவரும் பாத்தரைமாற்று என்ற சீரியலில் ஒன்றாக நடித்து வந்தனர்.
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இரு குடும்பத்தினர் முன்னிலையில், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இவர்களின் திருமணம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதற்கு காரணம் நடிகர் கிறிஸ் வேணுகோபாலுக்கு 50 வயது நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு 40 வயது என்பதுதான். இதுபற்றிய மோசமான விமர்சனங்களை பார்த்த திவ்யா ஸ்ரீதர் பதிலடி கொடுத்துள்ளார்.
விமர்சனங்கள்
செய்தியாளர்களை சந்தித்து பேசிய திவ்யா ஸ்ரீதர், நாங்கள் நாலு பேருக்கு மட்டும்தான் திருமணம் செய்யப் போகிறோம். திருமணத்திற்கு பின் இதுபோன்ற எதிர்மறை கருத்துக்கள் வரும் என்று தெரியும், ஆனால் இப்படியொரு கமெண்ட் வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.
மேலும், கிறிஸ் வேணுகோபால், இருவரின் குடும்பமும் ஒத்துத்தான் இந்த திருமணத்தை செய்துகொண்டோம். அப்படியிருக்கும் போது வேடிக்கை பார்ப்பவர்களுக்கு என்ன பிரச்ச்னை.
நடிகர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பது தான் பலரின் வேலையாக இருப்பதால் எங்கள் திருமணம் குறித்து எந்த எதிர்மறையாக வந்தால் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கிறிஸ் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.