பேருக்குத்தான் கமர்சியல் இயக்குநர்! கதாநாயகியை ஐட்டம் நடிகையாக மாற்றிய கேஎஸ் ரவிக்குமார்!

sarathkumar rani nattamai
By Edward Jun 02, 2021 03:49 PM GMT
Report

தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களை இயக்கும் பல இயக்குநர்கள் களமிரங்கி வருகிறார்கள். அதில் 90களில் இருந்தே அதற்கான பெயரை பிடித்தவர் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

கே எஸ் ரவிக்குமார் படங்களில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு சிறப்பாக அமையும். அதிலும் அவர் கமர்சியல் இயக்குனர் என்பதால் கவர்ச்சி ஐட்டங்கள் சில படங்களில் இடம்பெறும். அதில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படமாக இருந்தது நாட்டாமை படம் தான்.

கேஎஸ் ரவிக்குமார் இயகத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பில் நல்ல பேரும் புகழும் கொடுத்தது. இதையடுத்து பல கமர்சியல் ஹிட் கொடுத்தார் கேஎஸ் ரவிக்குமார். அதிலும் நாட்டாமை படத்தில் ரசிகர்கள் மத்தியில் கவர்ந்தவர் டீச்சராக நடித்த நடிகை ராணிக்கு தான். தமிழ் சினிமாவில் கங்கை அமரன் இயக்கிய வில்லுபாட்டுகாரன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

எப்படியாவது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து விட வேண்டும் என்ற கனவில் நாயகியானார். ஆனால், நாட்டாமை படத்தில் கேஎஸ் ரவிக்குமார் நாட்டாமை டீச்சர் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தாராம். இதன்பின் அப்படத்தில் நடித்ததன் மூலம் ஐட்டம் கதாபாத்திரத்தில் மட்டும் இயக்குநர்கள் நடிக்க கேட்டு வந்தனர்.

நடிகை ராணி தற்போது தெலுங்கு சினிமாவின் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி சினிமாவிற்கு டாட்டா கூறிவிட்டாராம்.