நெல்சனை நம்ப முடியாமல் விபரீத முடிவு? சந்தேகத்தில் பிரபல இயக்குனரை வலைத்து போட்ட ரஜினிகாந்த்..

Rajinikanth Nelson Dilipkumar K. S. Ravikumar
By Edward Jun 06, 2022 09:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு அனிருத் இசையில் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் ரஜினிகாந்த். பீஸ்ட் படம் வெளியாகும் முன்பே இந்த கூட்டணி இந்த அறிவிப்பை வெளியிட்டது.

ஆனா ல் பீஸ்ட் தோல்வியால் ரஜினி சற்று குழப்பத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ரஜினி நெல்சன் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் தலைவர் 169 கூடிய சீக்கிரம் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், வரும் பொங்களுக்குள் படத்தினை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளார்களாம். அதற்கான அதிகாரப்பூர்வ தகவலும் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிரது.

இப்படத்திற்காக ஐஸ்வர்யா ராய், ரம்யாகிருஷ்ணன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட நடிகைகளிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் தலைவர் 169 படத்தில் 30 நிமிடங்கள் நடிக்கவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

மேலும் நெல்சனுக்கு உதவியாக இயக்குனர் மற்றும் நடிகருமான கே எஸ் ரவிக்குமார் இப்படத்தில் இணைந்துள்ளாராம். இதற்கு முக்கிய காரணம் படத்தின் டைரக்ஷன் மற்றும் திரைக்கதையை வேண்டிய இடங்களில் மாற்றவும் சரிசெய்யவும் உதவியாக இருக்கும் என்பதால் கே எஸ் ரவிக்குமாரை பிளான் போட்டு தூக்கி இருக்கிறாராம்.

இப்படி ரஜினி முடிவு எடுக்க நெல்சனின் பீஸ்ட் படம் தானாம். முழுக்க கிரைம் ஸ்டோரியாக உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.