ஒரு நடிகையை சாகடித்து காசு சம்பாதிக்கனுமா? இறந்ததாக லீக்கான செய்தியால் அதிர்ந்து போன அண்ணாத்த பட நடிகை
மலையாள நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை குலப்புள்ளி லீலா. குணச்சித்திர கதாபாத்திரத்தில் கிட்டதட்ட 100 படங்களுக்கு மேல் மலையாள சினிமாவில் பயணித்தவர். தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வந்த நடிகை லீலா முத்து, கஸ்தூரி மான் போன்ற படங்களுக்கு பிறகு விஷால் நடித்த மருது படத்திலும் நடித்திருந்தார்.
மேலும் மாஸ்டர், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் ஆச்சியாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை லீலா மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி இணையத்தில் செய்தியாக வெளியானது.

லீலாவின் உறவினர்கள் நண்பர்கள் என்று போனில் தொடர்பு கொண்டு விவாரித்து வந்தனர். இதனை அறிந்த நடிகை லீலா, லைக்ஸை பெறுவதற்காகவும், ஷேர் செய்யப்பட வேண்டும் என்று இப்படி பொய்யான செய்திகளை பகிரப்பட்டு வருகிறார்கள்.
இதன்மூலம் ஒரு நடிகையை சாகடித்து அவர்களுக்கு காசு கிடைக்கிறது. உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக கூறிதான் சம்பாதிக்க வேண்டுமா என்று கூறி விளாசியுள்ளார் குலப்புள்ளி லீலா.