நீயா நானா: எய்ட்ஸ் பாதிப்பு பேச்சு..கணவர் பிரிஞ்சிட்டாரு!! கும்மி டான்சர் சங்கீதா குமுறல்..
நீயா நானா
சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி ட்ரோல் மெட்டீரியலானவர்களை வைத்து நீயா நானா நிகழ்ச்சியில் சமீபத்தில் விவாதம் செய்யப்பட்டது. அதில் தன்னை மிகப்பெரியளவில் ட்ரோல் செய்து வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக கும்மி டான்சர் சங்கீதா புலம்பி இருந்தார்.
கும்மி டான்சர் சங்கீதா
அதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியொன்றில், சோசியல் மீடியாவில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டாலே, அவர்களை பற்றி தவறாக பேசணுமா? வெறும் ஒரு நிமிட வீடியோவை வைத்து ஒரு பெண்ணை எப்படி தவறாக மதிப்பிடலாம்? ஒருவரை பற்றி எதுவுமே தெரியாமல் எப்படி பேசலாம்? பிறரை பற்றி தவறாக பேசும் உரிமையை யார் இவர்களுக்கு தந்தது? அப்படியானால் கமெண்ட் பதிவிடுபவர்களும் சமூகத்தில் உள்ள மற்றவர்களும் சரியாகத்தான் இருக்கிறார்களா என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நீயா நானா நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தபோது ட்ரோல் செய்வதற்கான கண்டண்ட் என்று சொல்லித்தான் அழைத்தார்கள். நிறைய பேர் அதன்பின் என்னஒ ட்ரோல் செய்ததால் அதற்கான காரணம் கேட்கத்தான் நீயா நானா நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டேன். ஒரு பெண் சோசியல் மீடியாவில் ரியாக்ஷன் ஏதாவ்து கொடுத்தால் உடனே ட்ரெண்ட் செய்கிறார்கள்.
ஆனால் இரு ஆண் ரியாக்ஷன் கொடுத்தால் ட்ரெண்ட்டாக்குவதில்லை. ஒரு பெண்ணால் எப்படி இவ்வளவு தூரம் பிரபலமாக முடியும் என்று பொறாமை ஆண்களுக்கு இருக்கிறது என்பதால் மோசமான கமெண்ட்களை பெரும்பாலான ஆண்கள் செய்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் ஆணாதிக்கம் தான்.
கமெண்ட்
உன்னை யாரு நீயா நானா ஷோ-வில் கலந்து கொள்ள சொன்னது? நீயென்ன அவ்ளோ பெரிய ஆளா? என்று திட்டுகிறாரக்ள். சோசியல் மீடியாவில் ரீல்ஸ் பகிர்ந்தால் அடுத்தவர்களை பற்றி பேசணுமா? ரீல்ஸ் பதிவிடுவது வெறும் ஒரு நிமிடம் இருக்கலாம், 1 நிமிட வீடியோவை வைத்து இப்படிப்பட்ட பெண் தான் என்று எப்படி முடிவு செய்யலாம்?. உனக்கு எய்ட்ஸ் இருக்கு, நீ போய் நல்ல டாக்டரை பாருன்னு கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுவதும் இதுவரை மாறவில்லை.
நீ பார்க்குறதுக்கு திருநங்கை போலவே இருக்க என்று கூறுகிறார்கள். நான் அந்த டான்ஸ் ஆடியதாலேயே என்னை பலரும் கவுண்டர் சமூகத்து பெண் என்று நினைக்கிறார்கள். அந்த டான்ஸ் ஆட சென்றதே, என் மன அழுத்தத்தை குறைக்கத்தான். எனக்கு சின்ன வயசில் முருகர் சாமி மிகவும் பிடிக்கும், நடனமும் பிடிக்கும்.
இரண்டரை வருடம் அந்த நடனத்துக்காக நான் கஷ்டப்பட்டிருக்கிறேன், ஆனா நாக்கை நீட்டியதை மட்டுமே வைத்து என்னை திட்டித்தீர்க்கிறார்கள். இதனால் என் வாழ்க்கையில் நிறைய இழந்துட்டேன். மோசமான கமெண்ட்ஸ்களால் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட்டாகியதால், என் கணவர் என்னைவிட்டு விலகி சென்றுவிட்டார், விவாகரத்து ஆகவில்லை, ஆனால் பிரிந்திருக்கிறோம் என்று சங்கீதா தெரிவித்துள்ளார்.
கொங்கா அக்கா கொடூரமாக தாக்கப்பட்டார் pic.twitter.com/O5mqGMZfnv
— Haraappan (@haraappan) May 16, 2025