நயன்தாரா இருந்தாலும் இவங்க வேணும்? மூக்குத்தி அம்மன் 2ல் இணைந்த டாப் நாயகி!

Sundar C Nayanthara Kushboo Actress
By Bhavya Sep 21, 2025 05:30 AM GMT
Report

மூக்குத்தி அம்மன்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020 - ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

இப்படத்தில் ஊர்வசி, மௌலி, ஸ்ம்ருதி வெங்கட், அஜய் ஜோஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நேரடியாக OTT -யில் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இதில் நயன்தாராவுடன் ரெஜினா, இனியா, யோகி பாபு, சிங்கம் புலி மற்றும் கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

நயன்தாரா இருந்தாலும் இவங்க வேணும்? மூக்குத்தி அம்மன் 2ல் இணைந்த டாப் நாயகி! | Kushboo In Sundar C Movie Update Goes Viral

டாப் நாயகி! 

இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது, இந்த படத்தில், தன்னுடைய மனைவியும், நடிகையுமான குஷ்பூவை ஆடவைக்க சுந்தர் சி திட்டமிட்டு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.  

நயன்தாரா இருந்தாலும் இவங்க வேணும்? மூக்குத்தி அம்மன் 2ல் இணைந்த டாப் நாயகி! | Kushboo In Sundar C Movie Update Goes Viral