நயன்தாரா குறித்து கொச்சையாக பேசிய பிரபலம்.. கொந்தளித்த நடிகை குஷ்பூ
சமீப காலமாக சினிமா நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு அரசியல் பிரபலங்கள் கொச்சையாக பேசி வருகிறார்கள்.
திரிஷா - விஜய் சம்மந்தப்படுத்தி பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது அதிமுக எம்பி சிவி சண்முகம், 'எனக்கு நயன்தாரா வேண்டும், சிஎம் கொடுப்பாரா' என மோசமாக பேசியிருக்கிறார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். "பெண்கள், குறிப்பாக பெண் நடிகர்கள், உங்கள் சொத்து அல்ல, உங்கள் பேச்சுப் பொருள் அல்ல, அல்லது ஒவ்வொருவரும் தங்களுக்கு வசதியாக இருக்கும்போதெல்லாம் உரையாடல்களில் இழுத்து வரக்கூடிய ஒரு பண்டம் அல்ல".
"ஒரு பெண் நடிகரின் பெயர், மலிவான நகைச்சுவைகளுக்கோ, அற்பமான அவமானங்களுக்கோ, அல்லது ஒருவரின் வாதத்தை நியாயப்படுத்துவதற்கோ ஒரு கருவி அல்ல. மற்றவர்களைக் கேலி செய்வதற்கோ அல்லது ஒரு கருத்தை நிரூபிப்பதற்கோ ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பயன்படுத்துவது, பேசுபவரின் மனநிலையையும் வளர்ப்பையும் மட்டுமே அம்பலப்படுத்துகிறது".

பெண்கள் — குறிப்பாக பெண் நடிகர்கள் — உங்கள் சொத்து அல்ல, உங்கள் பேச்சுப் பொருள் அல்ல, அல்லது ஒவ்வொருவரும் தங்களுக்கு வசதியாக இருக்கும்போதெல்லாம் உரையாடல்களில் இழுத்து வரக்கூடிய ஒரு பண்டம் அல்ல.
— KhushbuSundar (@khushsundar) March 17, 2026
ஒரு பெண் நடிகரின் பெயர், மலிவான நகைச்சுவைகளுக்கோ, அற்பமான அவமானங்களுக்கோ, அல்லது…