படுஒல்லியாக மாறி நடிகை குஷ்பு! கேலி செய்த நபருக்கு பதிலடி கொடுத்து மெசேஜ்..

kushboo sundarc tamilactress
By Edward Aug 25, 2021 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இட்லி நடிகை என்ற பெயர் பெற்று 80, 90களில் கொடுக்கட்டி பறந்த நடிகையாக திகழ்பவர் நடிகை குஷ்பு. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். உடல் எடையை கூட்டி குண்டாக இருந்த குஷ்பு தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்துள்ளார்.

சமீபத்தில் இளம் நடிகையை போல் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு டிரெண்ட்டானார். ரசிகர்கள் பாராட்டுகளையும் பிரபலங்களின் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வந்தனர். அதில் ஒருவர் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் கணவர் என்ன கூறினார் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

அதற்கு அமைதியாக பதிலளித்தார் குஷ்பு. இந்நிலையில் அவரது புகைப்படத்தினை பார்த்த ஒரு நபர், போட்டோ எடுட்டர் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் புகைப்படத்தை மாற்றலாம் என புகைப்படம் நிரூபித்துவிட்டது என்று கிண்டல் செய்து மெசேஜ் செய்துள்ளார். அதற்கு குஷ்பு, எதிர்மறையான எண்ணங்களும், தாழ்வு மனப்பான்மையும் கொண்ட உங்களை பார்த்து நான் இரக்கபடுகிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.