பெண் இயக்குநருடன் சண்டை போட்டாரா யஷ்!! ஒரே மிதியில் பதிலடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்..

Yash Gossip Today
By Edward Oct 30, 2025 12:30 PM GMT
Report

யஷ் - டாக்ஸிக்

கேஜிஎஃப் 2 படத்தினை தொடர்ந்து நடிகர் யஷ், இயக்குநர் கீதா மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை நயன் தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பல இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தான் டாக்ஸிக் படத்தை தயாரித்து வருகிறது. மாதவனின் நடிப்பில் வெளியான நள தமயந்தி படத்தில் கீதா மோகன் தாஸ் நடித்திருந்தார்.

பெண் இயக்குநருடன் சண்டை போட்டாரா யஷ்!! ஒரே மிதியில் பதிலடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்.. | Kvn Productions Shuts Rumours About Yashs Toxic

அவர் இயக்கத்தில் யஷ் நடித்து வரும் பிரமாண்டமான படமாக உருவாகி வந்த டாக்ஸிக் படம் கிடப்பில் போடப்பட்டது என்றும் கீதா மோகன் தாஸ் படத்தை கெடுத்துவிட்டார், அவருக்கு டைரக்ஷனே தெரியல என்றும் யஷ் சண்டை போட்டுவிட்டார் என்றும் பொய்யான செய்திகள் சமூகவலைத்தளத்தில் பரவியது.

2026 மார்ச் 19

இந்நிலையில், கேவிஎன் நிறுவனம் இன்னும் 140 நாட்கள் தான், 2026 மார்ச் 19 ஆம் தேதி யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேவையற்ற வதந்திகளை பரப்பியவர்களுக்கு ஒரே மிதி கொடுப்பது போல் கேவிஎன் நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.