இளைஞரை ஆசை காட்டி ஆபாச படத்தில் நடிக்க வைத்த பெண் இயக்குனர்.. வெளியான அதிர்ச்சி தகவல்
கேரளாவை சேர்ந்த பெண் இயக்குனர் லட்சுமி தீப்தா, நான்ஸி மற்றும் பால் பாயசம் போன்ற 18 பிளஸ் வெப் தொடரை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் 26 வயதான இளைஞர் ஒருவர் லட்சுமி தீப்தா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "லட்சுமி தீப்தா எனக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். ஒரு நாள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புக்கு வர சொன்னார். நானும் அங்கு சென்றேன்".

மிரட்டல்
"அப்போது சில காட்சிகள் படமாக்க பட்டது. திடீர் என்று லட்சுமி தீப்தா நிர்வாண காட்சியில் நடிக்க சொன்னார். அதற்கு நான் மறுத்தேன். அப்போது அவருடன் இருந்த சிலர் என்னை மிரட்டினார்கள். வேறு வழியில்லாமல் நானும் நடித்து விட்டேன். இது என்னுடைய எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் புகார் அளித்தேன்" என்று கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் லட்சுமி தீப்தாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
