40 வயதை எட்டிய நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

Nayanthara Net worth
By Kathick Nov 18, 2024 08:30 AM GMT
Kathick

Kathick

in Celebrity
Report

நடிகை நயன்தாரா இன்று திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் கைவசம் பல படங்கள் இருக்கிறது. 20 ஆண்டுகள் கடந்தும் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் 40வது பிறந்தநாள் இன்று.

மேலும் இன்று நயன்தாராவின் ஆவணப்படம் Nayanthara: Beyond the Fairy Tale வெளிவந்துள்ளது. இந்த நிலையில், நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் தகவல் வெளியாகியுள்ளது.

40 வயதை எட்டிய நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Lady Superstar Nayanthara Net Worth

அதன்படி, லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க, ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

இவருடைய சொத்து மதிப்பு ரூ. 200 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறுகின்றனர். சினிமாவை தாண்டி 9 Skin, femi9 உள்ளிட்ட பிசினஸ் செய்து வருகிறார். ரூ.1.76 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற சொகுசு கார்களை நயன்தாரா சொந்தமாக வைத்துள்ளார்.