என்னிடம் இருந்து விஜய் தப்பிவிட்டார்!! பிரபல நடிகை வெளியிட்ட நெருக்கமான புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் தன்னுடைய 49வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அவரின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து கூறிய நிலையில் லியோ படத்தில் விஜய் பாடிய நான் ரெடி பாடல் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது.
இந்நிலையில் விஜய் பிறந்தநாளுக்கு, அவரை அணைத்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை லைலா. நடிகர் சூர்யா - லைலா நடிப்பில் 2002ல் வெளியான படம் உன்னை நினைத்து.
இப்படத்தில் முதலில் விஜய் நடிப்பதாக இருந்து சில காட்சிகளும் எடுக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் விஜய் திடீரென விலகி சூர்யா நடிக்க கமிட்டாகினார். அதன்பின் லைலா, விஜய்யுடன் இணைந்து நடிக்கவே வாய்ப்பில்லாமல் இருந்துள்ளார்.
அதை வைத்து நடிகை லைலா, விஜய் என்னிடம் இருந்து தப்பித்துவிட்டார் என்று இணையத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறி பகிர்ந்துள்ளார்.