இந்த நோயால் பாதித்த இளம் நடிகையின் வீடியோ! 5 வருடங்களுக்கு பிறகு இப்படியொரு தோற்றமா?

lakshmimenon agp sundarapandian kumki tamilactresss
By Edward Oct 12, 2021 12:14 PM GMT
Edward

Edward

Report

சிறு வயது நடிகைகள் பலர் சில படங்களில் நடித்து பிரபலமாவதுண்டு. அந்த வரிசையில் மலையாள சிறுமியாக சுந்தர பாண்டியன் மற்றும் கும்கி போன்ற படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார். இதையடுத்து குட்டுபுலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து, படிப்பில் அக்கரைகொண்டு படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு விலகி சென்றார்.

தற்போது படங்களில் ஆர்வம் கொண்டதால். லட்சுமி மேனன் ஏஜிபி என்னும் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் லட்சுமி மேனன் ஸ்கிசோஃப்ரினியா எனும் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார். அதாவது ஸ்கிசோஃப்ரினியா நோய் பார்வை, கேட்கும் திறன், சுவை, நுகர்தல் மற்றும் உணர்ச்சி திறன் இந்த 5 உணர்வுகளையும் பாதிக்கும்.

மேலும் கோபத்தில் பேசுதல் மற்றும் எதையோ ஒன்று நினைத்தல் போன்றவை அடிக்கடி நினைவிற்கு வந்து போகும். ஸ்கிசோஃப்ரினியா நோய்க்கு இன்று வரை எந்த ஒரு ஆய்வுக்கூடம் இல்லை. மேலும் நோயாளியின் மூளையில் மெசோனிம்பிக் பாதையில் டோபமைன் அதிக அளவில் சுரப்பது இந்த நோய் வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த நோயால் பாதித்தவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாது நீண்டகாலமாக உணர்ச்சிகளையும் பாதிக்கும். தற்போது லட்சுமி மேனன் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.