வாய்ப்பில்லாமல் காணாமல் போன நடிகை லட்சுமி மேனனா இது!! வைரலாகும் புகைப்படம்..
கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பிற்காக வந்து கொடிக்கட்டி பறக்கும் பல மலையாள நடிகைகளின் வரிசையில் இணைந்தவர் தான் நடிகை லட்சுமி மேனன்.
பள்ளி படிக்கும் போதே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு தமிழில் கும்கி படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் லட்சுமி மேனன்.
அப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனன் மீண்டும் படிக்க ஆசைப்பட்டு கொஞ்சம் பிரேக் எடுத்தார்.
அதன்பின் ஒருசில படங்களில் கமிட்டாகிய லட்சுமி மேனன் உடல் எடையை அதிகரித்ததால் வாய்ப்பினை இழந்து வந்தார்.
அதன்பின் ஏஜிபி என்ற படத்தில் நடித்தார். தற்போது வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2வில் நடித்தும் வந்துள்ளார்.
அப்படக்குழுவினருடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு லட்சுமி மேனனை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.