ஒரே நாளில் தலையில் துண்டை போட்ட லால் சலாம்!! ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வந்த சோதனை..
Rajinikanth
Aishwarya Rajinikanth
Gossip Today
Lal Salaam
By Edward
3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி இயக்குனராக ஜொலித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, தனுஷை பிரிந்த பின் மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் நேற்று வெளியாகியது. ஏ ஆர் ரகுமான் இசையில் ரிலீஸ் ஆன லால் சலாம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
உலகளவில் லால் சலாம் படம் மொத்தம் 8 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. இந்நிலையில் தெலுங்கில் வெளியான லால் சலாம் ஒரு பைசா கூட விற்பனையாகாமல் மிகப்பெரிய வசூலை ஆரம்பித்திருக்கிறது.
தெலுங்கில் ரஜினி நடித்து வெளியான படம் வாஸ் அவுட் ஆகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.