ரஜினி, கமல் எல்லாம் ஓரமா போங்க... லெஜண்ட் சரவணாவுக்கு போட்டியாக களமிரங்குகிறாரா அல்ட்ரா லெஜண்ட்?

Saravanan Arul The Legend
5 நாட்கள் முன்
Edward

Edward

ஒரு தொழிலையோ, பொருட்களையோ விளம்பரப்படுத்த நடிகர் நடிகைகளை வைத்து விளம்பர வீடியோக்களை வெளியிட்டு பிரபலப்படுத்துவதுண்டு. அதை முற்றிலுமாக தூக்கி எறிந்தவர் தான் லெஜண்ட் சரவணா. தன்னுடைய சரவணா ஸ்டோர்ஸ் கடையை தானே நடித்து நடிகைகளையும் கூட வைத்து நடிக்க வைத்தார்.

இதனையடுத்து தன்னாலும் நடிக்க முடியும் என்று தி லெஜண்ட் படத்தினை தயாரித்து நடித்து வெளியிட்டார். பான் இந்தியன் படமாக 5 மொழிகளில் வெளியாகி முதல் நாளே 2 கோடி வசூல் பெற்றது. இந்நிலையில், லெஜண்ட் சரவணாவுக்கு போட்டியாக லலிதா ஜுவல்லரி கடையின் நிறுவனர் கிரண் குமார் இறங்கியுள்ளார்.

தன்னுடைய கடையின் விளம்பரத்தில் கூட இவரே நடித்திருப்பார். இதனால் அல்ட்ரா லெஜண்ட்டாக சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாமே என்ற கேள்வி பலரிடமிருந்து கேட்கப்பட்டு இணையத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனக்கு சினிமாவுக்கு வர எண்ணம் சுத்தமாக இல்லை. தன்னால் டான்ஸ் எல்லாம் ஆட முடியாது. தற்போது இருக்கும் இடமே எனக்கு போதுமானது என்று கூறியுள்ளார்.

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.