பத்திரிக்கையாளரை மிரட்டிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்! பொங்கி எழுந்த பயில்வான்

Bayilvan Ranganathan Lakshmy Ramakrishnan
By Jai Sep 19, 2022 05:05 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது பல கிசுகிசு செய்திகளையும் நட்சத்திரங்களில் அந்தரங்க செய்திகளை புட்டுபுட்டு வைத்து வருபவர் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

சமீபகாலமாக நடிகைகளை பற்றி அவதூறாக பேசியும் அசிங்கப்படுத்தியும் பேசி வருவதை பலர் கண்டித்து கருத்துக்களை கூறிவருகிறார்கள். அந்தவரிசையில் நடிகை ஓவியா, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றி கேவளமாக பேசியதாக நடிகைகள் கண்டனம் தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்.

இந்நிலையில் இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன், பயில்வான் அவர்களுக்கு கால் செய்து கண்டபடி திட்டிபேசியுள்ளார்.

அதற்கு நானும் பல கேள்விகளை கேட்டிருந்தேன். என் கணவர் யார் தெரியுமா? நான் யார் தெரியுமா என்று மிரட்டி பேசியதற்கு ஒரு கேள்வி கேட்டேன் அதற்கு போனை கட் செய்து ஓடிவிட்டார் என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

நடிகை நடிகர்களை பற்றி நான் பேசுவது பலர் எனக்கு கால் செய்து மிரட்டியுள்ளார்கள். அவர்களின் செய்தியை ஆதாரம் இல்லாமல் நான் கூற மாட்டேன் என்று கூறியுள்ளார்.