கையில் சிகரெட்டுடன் மகா காளி! சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குனர் லீனா மணிமேகலை

Gossip Today Indian Actress
1 மாதம் முன்
Edward

Edward

சினிமாவில் கவிஞர், ஆவணப்பட இயக்குனர், இண்டிபெண்டெண்ட் திரைப்பட இயக்குனர் என்று பன்முகத்திறமை கொண்டு விளங்கி வருபவர் இயக்குனர் லீனா மணிமேகலை. சமுக அக்கரையோடும், பாலியல் மற்றும் சமுக ஒடுக்குறைகளுக்கு எதிராகவும் ஈழப்போராட்டங்கள் குறித்தும் ஆவணப்படமாக எடுத்து வருகிறார் லீனா.

இப்படங்களுக்கு பிறகு அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள காளி படத்தின் போஸ்டர் தற்போது இந்தியா முழுவதும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் கூட மாடத்தி என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து காளி வேடமிட்ட ஒரு பெண் சிகரெட்டை புகைப்பது போலுள்ள ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

சிகரெட்டுடன், கையில் LGBT கொடியை பிடித்திருப்பது போன்றுள்ளது. இந்து மதத்தினை இப்படி அவதூறாக சித்தரிப்பதாக டெல்லியை சார்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டல் என்பவர் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

இதற்கு இந்து தெய்வத்தை அவமதித்ததாகவும் மத உணர்வுகலை லீனா மணிமேகலை புண்படுத்தியுள்ளதாகவும் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதனை பார்த்த லீனா எனக்கு இழப்பத்ற்கு ஒன்றுமில்லை. இருக்கும்வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதை பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன் என்று கூறியதோடு அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம் என்று ஒரு பதிவினையும் பதிவிட்டுள்ளார்.

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.