வயதாகியும் திருமணத்திற்கு நோ சொல்லும் நடிகைகள்.. யாரெல்லாம் பாருங்க
சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து நடிகர்களுக்கு இணையாக வலம் வரும் நடிகைகள் இங்கு பலர் உள்ளனர்.
இதில், சில நடிகைகள் 30 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களது வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் வாழும் நடிகைகள் குறித்து கீழே காணலாம்.
தமன்னா:
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் தற்போது சில படங்களில் சிறப்பு பாடல்களுக்கு நடனமாடி வருகிறார். 36 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.
பூஜா ஹெக்டே:
இந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ.
ரெட்ரோ படத்தை தொடர்ந்து ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் பூஜா ஹெக்டே அடுத்ததாக தளபதி விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். 35 வயதாகியும் இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ராஷி கண்ணா:
நடிகை ராஷி கண்ணா, நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் நல்ல கதையுள்ள படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு 35 வயதாகிறது.