விராட் கோலி லைக் போட்டது குத்தமா!! புலம்பும் ஜெர்மன் இன்ஃப்ளூயன்ஸர் லிஸ் லஸ்...
விராட் கோலி லைக்
ஜெர்மனியை பூர்வீகமாக கொண்டு, தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்டதுதான் வைரலாகியுள்ளது. தென்னாப்பிரிக்க மாடல் பிரபலமான லிஸ்லஸ் (LizLaz) மற்றும் புகைப்படக் கலைஞர் அத்வைத் வைத்யா ஆகியோர் இணைந்து போட்ட பதிவிற்கு, விராட் கோலி லைக் போட்டுள்ளார்.

இந்த விவகாரம் வைரலானதை தொடர்ந்து, ஆனால் விராட் கோலி அவர்கள் யாரையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்யவில்லை. இது சில நிமிடங்களிலேயே வைரலானது.
ஆனால் இது வெறும் அல்காரிதம் சார்ந்த பிரச்சனைதான் என்றும் சில நேரங்களில் நான் ஒருபோதும் விரும்பாத பதிவுகளை என் இன்ஸ்டாகிராமில் பார்க்கிறேன் என்றும் விராட் கோலி கடந்த காலத்தில் இருந்தே கூறியிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

லிஸ் லஸ்
இந்நிலையில், இந்த விவகாரம் பேசுபொருளானதையடுத்து, ஜெர்மன் இன்ஃப்ளூயன்ஸர் லிஸ் லாஸ் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், நான் காலையில் எழுந்தபோது எல்லா இடங்களிலும் இந்த செய்திதான். அவர் எப்போது லைக் செய்தார் என்றுகூட எனக்கு தெரியாது.
இன்ஸ்டாவில் என் படத்தை கோலி லைக் செய்தது ஏன் இவ்வளவு பெரிய செய்தியானது என எனக்கு தெரியவில்லை. இதெல்லாம் கோலியின் நோக்கமாக இருந்திருக்காது. அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். ஆர்சிபி ரசிகையான என் படத்தை அவர் லைக் செய்தது எனக்கு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார் லிஸ் லஸ்.