விஜய்யால் லோகேஷ் கனகராஜ் படும் கஷ்டம்.. பொறுமையை சோதித்த பத்திரிக்கையாளர்கள்
2017ல் வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் லோகேஷ் கனகராஜ். முதல் படமே சூப்பர் ஹிட்டான நிலையில் நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தினையும் இயக்கினர்.
பிளாக் பஸ்டர் மூவிஸ்
2019ல் வெளியாகி பிளாக் பஸ்டர் படமாக அமைந்த கைதியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தினையும் இயக்கினார். 3 படங்கள் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததை தொடர்ந்து மல்டிவெர்ஷன் அமைப்பில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டவர்களை வைத்து விக்ரம் படத்தினை இயக்கினார்.
ஜூன் 3 ஆம் தேதி வெளியான இப்படம் 500 கொடிக்களுக்கும் மேல் வசூல் சாதனை படைத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது இதனைதொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மீண்டும் தளபதி 67 படத்தினை இயக்கவுள்ளார்.
இதற்கான பணிகள் சென்று கொண்டிருப்பதால் சமுகவலைத்தளங்களிலில் இருந்து விலகி இருப்பதாகவும் கூறியிருந்தார் லோகேஷ். எங்கு லோகேஷ் சென்றாலும் பத்திரிக்கையாளர்கள் ரசிகர்கள் தளபதி 67 படத்தின் அப்டேட்டை கேட்டுக்கொண்டே இருந்து வருகிறார்கள்.
தளபதி 67 அப்டேட்
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த லோகேஷ் எத்தனைமுறை கூறுவது பொறுமையாக இருங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் லோகேஷிடம் செய்தியாளர்கள் தளபதி 67 அப்டேட் கேட்டுள்ளனர். அதற்கு லோகேஷ், 5 மாதங்களாக நான் சொல்லிட்டு இருக்கிறேன்.
ஒரு மாதம் கழித்து வரும். விஜய்யின் 66 படம் சென்று கொண்டிருக்கிறதால் இப்போது அதை பற்றி கூறமுடியாது. தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிப்பு வந்ததும் நான் கூறுகிறேன் என்று கூறியுள்ளார். இப்படி லோகேஷை பாடாய் படுத்துறீங்களே என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
.@Actorvijay 67 Update ? @Dir_Lokesh pic.twitter.com/u1jUG1TsXo
— #Thalapathy67 (@Vijay67FiImOffl) September 15, 2022