கைவிட்ட மனைவி, குழந்தைகள்..லொள்ளு சபா நடிகர் ஆண்டணி காலமானார்.. இதுதான் காரணம்..

Star Vijay Actors Death Tamil Actors
By Edward Apr 09, 2025 10:30 AM GMT
Report

லொள்ளு சபா ஆண்டணி

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரேட் நிகழ்ச்சியாக இருந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி லொள்ளு சபா. பல நட்சத்திரங்கள் இந்நிகழ்ச்சியில் நடித்து தற்போது மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடிகர் சந்தானத்துடன் பல எபிசோட்டில் இணைந்து நடித்த நடிகர் ஆண்டனி சில வருடங்களாக உடல்நிலை குறைபாட்டால் அவதியுற்று வந்துள்ளார்.

கைவிட்ட மனைவி, குழந்தைகள்..லொள்ளு சபா நடிகர் ஆண்டணி காலமானார்.. இதுதான் காரணம்.. | Lollu Sabha Famous Actor Antony Passed Away

காலமானார்

இதுபற்றி நடிகரும் லொள்ளு சபா பிரபலமுமான பழனியப்பன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லொள்ளு சபா நடிகர் ஆண்டனி இன்று அதிகாலை கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்ற வருத்தமான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். சென்று வா நண்பா என்ற போஸ்ட்டை போட்டுள்ளார்.

கைவிட்ட மனைவி, குழந்தைகள்

ஆண்டனி சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாவில் பிரபலமாகலாம் என்று நினைக்கும் போது உடல்நிலை சரியில்லாமல் போனது. முதலில் நெஞ்சு சளி ஏற்பட்டு ஆஸ்துமா பிரச்சனை வர, பின் இடுப்புக்கு கீழ் முழுவதும் நீர் கோர்த்து நடக்கமுடியாமல் போய்விட்டது.

கைவிட்ட மனைவி, குழந்தைகள்..லொள்ளு சபா நடிகர் ஆண்டணி காலமானார்.. இதுதான் காரணம்.. | Lollu Sabha Famous Actor Antony Passed Away

சாதாரண மனிதர்கள் போல் என்னால் படுத்து தூங்கமுடியாது, படுத்தால் மூச்சு திணறல் ஏற்படும், அதனால் சிறிது நேரம் உட்கார்ந்து, சிறுது நேரம் நின்று கொண்டும் தான் இருக்க முடியும்.

உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முன்பே என் மனைவி, குழந்தைகள் என்னைவிட்டு போய்விட்டதாகவும் என்னை பார்த்துக்கொள்ள யாரும் கிடையாது என்றும் ஆண்டனி தெரிவித்திருந்தார்.