ரூ.6000 கொடுத்து இவ்வளவுதான்னு சொன்னார் சந்தானம்!! லொள்ளு சபா மனோகர் வேதனை..

Santhanam Tamil TV Shows Tamil Actors
By Jai May 27, 2026 12:45 PM GMT
Report

லொள்ளு சபா மனோகர்

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி இன்று வரை ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் லொள்ளு சபா. தற்போது சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் சந்தானம் முதல் பல நட்சத்திரங்கள் நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது லொள்ளு சபா.

ரூ.6000 கொடுத்து இவ்வளவுதான்னு சொன்னார் சந்தானம்!! லொள்ளு சபா மனோகர் வேதனை.. | Lollu Sabha Manohar Opens On Santhanam A1 Salary

இந்நிகழ்ச்சியில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மனிதில் நீங்கா இடம்பிடித்தவர் தான் லொள்ளு சபா புகழ் நடிகர் மனோகர். தன்னுடைய உடல் அசைவு, காமெடி திறமை, வசனக்கள் என்று தனித்துவமான பாணியில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார் மனோகர்.

சந்தானம்

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இப்போது எனக்கு படவாய்ப்பே வருவதில்லை. பழைய கலைஞர்களை யாரும் தேடுவதில்லை. ஒருகாலத்தில் எல்லாரையும் சிரிக்க வைக்க நாங்கள் காத்திருக்கிறோம். A1 படத்தில் நடித்தற்காக ஒருநாள் சம்பளமாக ரூ. 6 ஆயிரம் தான் கொடுத்தார்கள்.

ரூ.6000 கொடுத்து இவ்வளவுதான்னு சொன்னார் சந்தானம்!! லொள்ளு சபா மனோகர் வேதனை.. | Lollu Sabha Manohar Opens On Santhanam A1 Salary

நண்பன் என்ற உரிமையில், ஏம்பா, கொஞ்சம் கூடுதலா பார்த்துக்கோ என்று சந்தானத்திடம் கேட்டேன், ஆனால் அவர் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ரூ. 6000 தான் என்று கையில் கொடுத்துவிட்டு சென்றார் என்று கூறியிருக்கிறார் மனோகர்.