கவினுடன் கண்டிப்பா அதை செய்வேன்! உண்மையை உடைத்த ஈழப்பெண் நடிகை லாஸ்லியா..
இலங்கை செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லாஸ்லியா. படவாய்ப்பிற்காக தோழியுடன் சென்னை வந்த லாஸ்லியாவிற்கு பிரபல தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிக்பாஸ் காதல்:-
கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டு இருந்த லாஸ்லியா ஒரு கட்டத்தில் கவின் மீது காதலில் சிக்கினார். இந்த சம்பவம் பெரியளவில் வைரலாகியது.
இணையத்தில் விமர்சித்து லாஸ்லியாவை கிண்டல் செய்து வந்ததை பார்த்த அவரின் பெற்றோர்கள் ஃபிரீஸ் டாஸ்க்கில் கடினமாக லாஸ்லியாவிடம் கண்டித்து கொண்டனர். இதனால் போட்டியில் மட்டும் கவனம் செலுத்த துவங்கினார் லாஸ்லியா.
தந்தை மரணம்:-
பின் நிகழ்ச்சிவிட்டு வெளியேறிய லாஸ்லியா சில படங்களில் நடிக்க கமிட்டாகிய போது தந்தை மரணமடைந்தார். அதிலிருந்து மீண்டும் வர ஒருசில மாதங்களாகின.
அதன்பின் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்களிலும் விளம்பரப்படங்களிலும் நடித்து வந்தார். தற்போது குக்வித் கோமாளி பிரபலம் அஸ்வினுடன் Baby Nee Sugar என்ற அல்பம் பாடலுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார்.
சிம்பு குரலில் சாண்டி மாஸ்டர் நடன இயக்கத்தில் பாடல் வெளியாகவுள்ளது. அதன் பிரமோஷன் விஷயமாக பேட்டி கொடுத்து வருகிறார்கள் லாஸ்லியா, அஸ்வின்.
கவினுடன் மீண்டும் இணைய ஆசை:-
தற்போது ஒருசில படங்களிலும் வெப் சீரிஸ் படங்களிலும் நடித்து வருகிறேன் என லாஸ்லியா கூறியுள்ளார். கவினுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா? என்ற கேள்வியை தொகுப்பாளினி கேட்க, கண்டிப்பாக பண்ணுவேன் என்று கூறியுள்ளார் லாஸ்லியா.