நேற்று அண்ணன்.. இன்று நண்பன்.. நாளை காதலனா..? லொஸ்லியா இது ரொம்ப தப்புமா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லொஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லொஸ்லியாவிற்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, கடந்த வருடம் அர்ஜுன், ஹர்பஜன் நடிப்பில் வெளிவந்த Friendship படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ள கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தர்ஷன் மற்றும் லொஸ்லியா இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானார்கள். இந்த நிகழ்ச்சியில் தர்ஷனை, அண்ணன் என்ற லொஸ்லியா அழைத்து வந்தார்.
சமீபத்தில் இப்படத்தின் பிரஸ் மீட் நடந்தது, இந்த பிரஸ் மீட்டில் தர்ஷனை தனது நண்பன் என்று கூறியுள்ளார் லொஸ்லியா. இதனால், குழப்பான ரசிகர்கள் படத்தில் லொஸ்லியா மற்றும் தர்ஷன் நெருக்கமாக நடித்ததுதான் இந்த மாற்றத்திற்கு காரணமா என்று கேட்டு வருகிறார்கள்.
மற்றொரு புறம், நேத்து அண்ணன் என்று அழைத்த லொஸ்லியா இன்று நண்பன் என்று அழைக்கிறார், நாளை காதலன் என்று கூறிவிடுவாரோ என்று நெட்டிசன்கள் கொளுத்தி போட துவங்கிவிட்டனர்.