ஏதே ரூ. 35 லட்சமா!! ஆட்டோ வடிவிலான கைப்பை விலையை கேட்டு அதிரும் நெட்டிசன்கள்..
Viral Photos
Tamil Memes
Life Style
By Edward
ஆட்டோ கைப்பை
பெண்கள் பலரும் அதிகம் விரும்பும் ஆடம்பர பொருளாக இருப்பது கைப்பை தான். அதில் ஒவ்வொரு கலருக்கும் ஏற்றவாறு கைப்பைகளை வாங்கி குவிப்பார்கள். அப்படி வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் விதவிதமான கைப்பைகளை பல நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்வார்கள்.
அந்தவகையில், லூயிஸ் உய்ட்டன் என்ற பிராண்ட் தளமாக கொண்டு இயங்கி வரும் பிரபல நிறுவனம் உலகின் பல கடைகளை திறந்து புதுபுது மாடல் கைப்பைகளை விற்பனை செய்து வருகிறது.
தற்போது ஆட்டோ ரிக்சா வடிவிலான கைப்பை ஒன்றினை தயாரித்து அதன் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளது. இந்த ஆட்டோ டிசைன் கொண்ட கைப்பை, மோனாகிராம் கேன்வாஸ் தோலில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
அதிலும் இதன் விலை சுமார் ரூ.32 லட்சம் என்று கூறுகிறார்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த விலைக்கு 10 ஆட்டோக்கும் மேல் வாங்கிடலாமே என்று புலம்பி தள்ளுகிறார்கள்.
