கொண்டாட்டத்தின்போது காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதம்.. இறுதியில் அரங்கேறிய சோக சம்பவம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கார் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது, மொட்டைமாடியில் ஜான்வி(19) என்ற பெண் வந்துள்ளார்.
இதையடுத்து, கொண்டாட்டத்தின் போது காதலனுடன் ஏற்பட்ட தகராறில், ஜான்வி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில், ஜான்வியின் 22 வயது காதலனும் புத்தாண்டு விருந்தில் கலந்துகொண்டது தெரியவந்துள்ளது.
மேலும், ஜான்வி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வந்த நேரத்தில், ஜான்வியின் காதலர் மற்றொரு 19 வயது பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
இதனால் இருவரிடமும் சண்டையிட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஜான்வியை திருமணம் முடியாத கள்ளக்காதல் ஜோடி கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.