ஹரீஸ் கல்யாணைவிட அவங்க மாமியாருக்கு வயசு கம்மியாம். லப்பர் பந்தில் இதை கவனிச்சீங்களா..

Harish Kalyan Gossip Today Tamil Actress Lubber Pandhu
By Edward Nov 04, 2024 09:30 AM GMT
Report

லப்பர் பந்து

நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகி முழுக்க முழுக்க கிராமப்புற கிரிக்கெட்டை மையப்படுத்தி ரிலீஸான படம் லப்பர் பந்து. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் தீபாவளியன்று ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகியது.

ஹரீஸ் கல்யாணைவிட அவங்க மாமியாருக்கு வயசு கம்மியாம். லப்பர் பந்தில் இதை கவனிச்சீங்களா.. | Lubber Pandhu Harish Kalyan 34 Swasika Vijay 32https://tamil.filmibeat.com/news/fans-spreading-news-lubber-pandhu-harish-kalyan-age-34-swasika-vijay-age-32-goes-trending-145413.html

இந்நிலையில், படத்தின் கதாநாயகன் ஹரீஸ் கல்யாணின் வயதையும் அவரது மாமியாராக நடித்த ,அதாவது அட்டகத்தி தினேஷின் மனைவியாக நடித்த ஸ்வாசிகா விஜய்யின் வயதையும் இணையத்தில் தேடி எடுத்த இணைய வாசிகள் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அதாவது ஹரீஸ் கல்யாணுக்கு வயது 34, அதேபோல் ஸ்வாசிகாவுக்கு வயது 32. இதனைப் பார்த்த ரசிகர்கள் மருமகனைவிட மாமியாருக்கு வயது குறைவு என ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.