2ஆம் மனைவி வந்த நேரம் தான்! விஷ்ணு விஷாலுக்கு கொடுக்கும் வாய்ப்புகள்..
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக மூன்றாம் வரிசை நடிகராக திகழ்ந்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற போராடி வருபவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்ற விஷ்ணு விஷால் இதனை தொடர்ந்து காமெடி கலந்து கமெர்ஷியல் படங்களில் நடித்து வந்தார்.

ஜுவாலா குட்டா
சமீபத்தில் ராட்சசன், எஃப் ஐ ஆர் போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கட்டா குஸ்தி படம் நல்ல வரவேற்பு பெற்றும் வருகிறது. விஷ்ணு விஷால் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இரண்டா மனைவியின் கட்டுப்பாட்டில் விஷ்ணு விஷால் இருப்பதாக இசையமைப்பாளரும் நடிகருடமான விஜய் ஆண்டனி ஒரு டிவிட் போட்டிருந்தார்.
வாய்ப்புகள்
இந்நிலையில் ஜூவாலா குட்டா தான் தன் கணவர்களின் படக்கதையை கேட்டு புக் செய்கிறாராம். அப்படி அவரை திருமணம் செய்தது முதல் இன்றுவரை கிட்டத்தட்ட 9 படங்கள் கையில் வைத்தும் நடித்தும் அடுத்தடுத்து ரிலீசுக்கும் தயாராகி வருகிறதாம். அதிலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படத்தில் முக்கிய ரோலில் நடிப்பது மிகப்பெரிய வரவேற்பையும் மார்க்கெட்டையும் விஷ்ணு விஷாலுக்கு காத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.