ரூ. 15 ஆயிரம் கோடி அம்பானியின் ஆண்டிலியா வீடு!! இப்படியொரு வசதி இருக்கா..

Mukesh Dhirubhai Ambani Mumbai Anant Ambani Nita Ambani Akash Ambani
By Edward May 20, 2025 05:15 PM GMT
Report

முகேஷ் அம்பானி

இந்தியாவின் டாப் பணக்காரர்கள் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, மும்பையின் மையத்தில், நகரின் மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றில், அவரது குடும்பத்தினருடன் 27 மாடி கொண்ட ஆண்டிலியா வீட்டில் வசித்து வருகிறார்.

ரூ. 15 ஆயிரம் கோடி அம்பானியின் ஆண்டிலியா வீடு!! இப்படியொரு வசதி இருக்கா.. | Luxurious Things That Mukesh Ambanis Antilia Has

அந்த வீட்டை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த வீட்டில் பல ஆடம்பர வசதிகள் இருக்கிறது. அந்தவகையில் ஆண்டிலியா வீட்டில் என்ன வசதிகள் இருக்கிறது என்று பார்ப்போம்.

ஆண்டிலியா வீட்டின் வசதிகள்

  • உலகின் செல்வாக்கு மிகுந்த அரச வம்சங்களில் ஒன்றான இங்கிலாந்தின் அரச குடும்பம் வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையின் தோட்டங்களில் ஒரேவொரு ஹெலிபேடு மட்டும் தான் இருக்கிறது. ஆனால் ஆண்டிலியாவின் கூரைப்பகுதியில் 3 தனியார் ஹெலிபேடுகள் இருக்கிறது. முகேஷ் அம்பானி குடும்பத்தினரும் வீட்டில் இருந்து நாட்டின் எந்தப்பகுதிக்கும் அல்லது நாட்டிற்கு வெளியேயும் கூட எந்த சிரமும் இல்லாமல் பயணிக்க முடியும்.
  • அம்பானி குடும்பத்தினர் அவர்களின் ஆடம்பரமான கார் கலெக்ஷன்களுக்கு பெயர் பெற்றவர்கள். ஆண்டிலியா வீட்டில் 168 கார்கள் நிறுத்தக்கூடிய ஒரு பிரமாண்டமான கார் கேரேஜ் மற்றும் சர்வீசிங் நிலையமும் 6 மாடிகளில் உள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனையில் அரச கார்களின் ஒரு சிறிய தொகுப்பு மட்டுமே உள்ளது. ஆண்டிலியாவின் கார் கேரேஜின் அளவு மற்றும் பயன்பாடு மட்டும் ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மாலின் பார்க்கிங் வளாகத்துடன் ஒப்பிடத்தக்கதாம்.

ரூ. 15 ஆயிரம் கோடி அம்பானியின் ஆண்டிலியா வீடு!! இப்படியொரு வசதி இருக்கா.. | Luxurious Things That Mukesh Ambanis Antilia Has

  • மும்பையின் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலை ஆண்டிலியா வீட்டில் நுழையவே வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட தனித்துவமாக கட்டப்பட்ட ஒரு பனி அறையுள்ளது. ஆண்டிலியா வீட்டில் ஒரு ஏசி கூட அமைக்கப்படவில்லையாம். அதற்கு பதிலாக, வீடு சுற்றுச்சூழலுக்கு உகந்த காற்ற்போட்ட அமைப்பை பயன்படுத்துகிறார்கள். இது உட்புறங்களை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
  • 8 ரிக்டர் அளவுகோல் வரை நிலநடுக்கத்தை தாக்கக்கூடிய வலிமை ஆண்டிலியா வீட்டிற்கு உண்டு. ஆடம்பர வீடாக மட்டும் இல்லாமல் பாதுகாப்பான மாளிகையாகவும் இருக்கிறது. பக்கிங்ஹாம் அரண்மனையின் கட்டமைப்பு பாதுக்காப்புடன் ஒப்பிடும் போது, அது தொழில்நுட்ப ரீதியாக இயக்கப்படவில்லை. பூகம்பங்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டதாகவும் இல்லை.
  • இந்த அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் ஆண்டிலியா வீட்டின் மிகவும் பாதுக்காப்பான மாளிகையாக மாற்றும். இந்திய பாரம்பரியம் மற்றும் ஆடம்பரத்தின் கலவையை ஆண்டிலியா வீடு காட்டுகிறது. ஸ்பா, யோகா அறை, நீச்சல் குளம், ஜிம் போன்ற உடற்பயிற்சி மையமும் ஆண்டிலியா வீட்டில் இருக்கிறது.