தான்தான் என்ற கர்வம் கொண்டவர் வைரமுத்து!! விமர்சித்து பேசிய பிரபல பாடலாசிரியர்
தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசியராக திகழ்ந்து தமிழுக்கு பெருமை சேர்த்து வருபவர் கவிப்பேரரசு வைரமுத்து. தன்னுடைய வியக்கவைக்கும் வரிகளால் 80களில் ஆரம்பித்து தற்போது வரை கொடிக்கட்டி பறந்து பல விருதுகளுக்கு சொந்தக்காரராகியவர்.
இதற்கிடையில் அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்து சர்ச்சையாகியது. இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் சினேகன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் வைரமுத்து பற்றி விமர்சித்திருக்கிறார். சித்ரா லட்சுமணன் எடுத்த பேட்டியில் கலந்து கொண்டுள்ளார் சினேகன்.
அதில், என்னை பொறுத்தவரைக்கும், பலமும் அவர் தான் பலவீனமும் அவர் தான். எனக்குத் தெரிந்து அதிகமான கவிஞர்களை மனம் விட்டு பாராட்டியதே இல்லை என்று நினைக்கிறேன் அதுதான் அவரது பலவீனம்.
ஆனால் கவிதையில் நான் மட்டும் தான் என்று இருக்கும் அழுத்தம் இருக்கிறது, அதை நானே ஆதரவு செய்கிறேன். தன்னை மிஞ்சிய ஒன்று இல்லை என்பது தான் அவரை ஆகாயத்தில் கொண்டு சென்றிருக்கிறது என்று கூறியுள்ளார் சினேகன்.
மேலும், வெளிநாடு புத்தகத்தில் இருக்கும் கவிதைகளை பாராட்டும் அவர், தன்னோடு பயணிப்பவர்களை பாராட்டியதே இல்லை. அது வாய்வார்த்தையாகவே போய்விடும். ஒரு போட்டியாளர்களை, சமமாக நினைத்து போட்டிப்போடும் களத்தில் அமைத்துக் கொடுக்காதது பலவீனம் என்று சினேகன் குறிப்பிட்டிருக்கிறார்.