வசூலில் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி.. DD Next Level, மாமன் படங்களின் வசூல் விவரம்

Santhanam Soori
By Kathick May 19, 2025 11:30 AM GMT
Report

கடந்த வாரம் சூரியின் மாமன் திரைப்படமும் சந்தானத்தின் DD Next Level திரைப்படமும் வெளிவந்தது. இதில் மாமன் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

ஆனால், DD Next Level திரைப்படத்திற்கு மோசமான விமர்சனங்களே கிடைத்தன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

வசூலில் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி.. DD Next Level, மாமன் படங்களின் வசூல் விவரம் | Maaman Dd Next Level Box Office Collection

இந்த நிலையில், சூரியின் மாமன் மற்றும் சந்தானத்தின் DD Next Level ஆகிய இரண்டு திரைப்படங்களும் மூன்று நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, DD Next Level படம் உலகளவில் ரூ. 8 கோடி மட்டுமே மூன்று நாட்களில் வசூல் செய்துள்ளது. ஆனால், மாமன் திரைப்படம் உலகளவில் ரூ. 9.5 கோடி வசூல் செய்து DD Next Level படத்தை பாக்ஸ் ஆபிஸில் பின்னுக்கு தள்ளியுள்ளது. இதன்மூலம் வசூலில் பெரிய அடிவாங்கியுள்ளது சந்தானத்தின் DD Next Level.