6 மாதம் கர்ப்பம்!! மாதம்பட்டி ரங்கராஜனின் மனைவி வெளியிட்ட புகைப்படம்..

Cooku with Comali Marriage Madhampatty Rangaraj
By Edward Jul 27, 2025 06:30 AM GMT
Report

மாதம்பட்டி ரங்கராஜ்

மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி, தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் தமிழ்நாட்டில் உள்ள சிறந்த சமையல் கலை வல்லுநர்களில் ஒருவர் ஆவார்.

பிரபலங்களின் வீட்டில் விசேஷம் என்றால் அங்கு இவருடைய சமையல் தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுமூகமாக சென்றுகொண்டிருந்த இவருடைய திருமண வாழ்க்கையில் புயல் வீச துவங்கியதாக செய்திகள் வெளியாகின.

6 மாதம் கர்ப்பம்!! மாதம்பட்டி ரங்கராஜனின் மனைவி வெளியிட்ட புகைப்படம்.. | Madhampatty Rangaraj Wife Joycrizildaa Pregnant

மேலும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் காதலித்து வருகிறார் என்றும் இருவரும் விவரையில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

6 மாதம் கர்ப்பம்!! மாதம்பட்டி ரங்கராஜனின் மனைவி வெளியிட்ட புகைப்படம்.. | Madhampatty Rangaraj Wife Joycrizildaa Pregnant

திருமணம் - ஜாய் கிரிஸில்டா கர்ப்பம்

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாவை இன்று ஜூலை 27 ஆம் தேதி திருமணம் செய்திருக்கிறார். இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை இணையத்தில் ஜாய் கிரிஸில்டா பகிர்ந்துள்ளார். மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திருமணமாகி இரு மகன்கள் இருக்கும் மாதம்பட்டி ரங்கநாஜுக்கு, தற்போது விவாகரத்து ஆகிவிட்டதால், அதனைதொடர்ந்து இந்த செய்தியை பகிர்ந்துள்ளனர்.

Gallery