உதட்டு முத்த காட்சிக்காக என்னிடம் கெஞ்சினாங்க.. நடிகை மதுபாலா ஓபன் டாக்

Madhoo
By Kathick Jun 18, 2025 09:00 AM GMT
Report

மதுபாலா

90ஸ் காலகட்டத்தில் இந்தியளவில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் மதுபாலா. தமிழில் ரோஜா, ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்தார்.

உதட்டு முத்த காட்சிக்காக என்னிடம் கெஞ்சினாங்க.. நடிகை மதுபாலா ஓபன் டாக் | Madhoo Bala Talk About Acting In Intimate Scenes

உச்ச நட்சத்திரமாக இருந்த நேரத்தில் 1999ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அமையா, கியா என்ற இரு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின் சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் சினிமா பக்கம் கவனம் செலுத்த துவங்கினார்.

இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் கண்ணப்பா. விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷனில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.

உதட்டு முத்த காட்சிக்காக என்னிடம் கெஞ்சினாங்க.. நடிகை மதுபாலா ஓபன் டாக் | Madhoo Bala Talk About Acting In Intimate Scenes

முத்த காட்சி

இந்த நிலையில், இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது குறித்து பேசினார். "நெருக்கமான காட்சிகளில் நடிப்பது தர்ம சங்கடமாக இருக்கும். அதனால் பல படங்களை நிராகரித்துவிட்டேன். ஒரு படத்தில் என்னிடம் முன்கூட்டிய சொல்லாமல் முத்த காட்சியில் நடிக்க சொன்னார்கள். அதுவும் உதட்டு முத்த காட்சியில் நடிப்பதற்காக என்னிடம் அதிக நேரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த காட்சியில் நடிக்க எனக்கு மிகவும் வேதனையான அனுபவமாக இருந்தது" என கூறியிருக்கிறார்.