52 வயதான 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை மதுபாலாவா இது? வைரல் புகைப்படம்
சினிமாவில் நடிகைகள் பெரும்பாலானவர்கள் சில காரணங்களால் சினிமாவில் நடிப்பதை தொடர்வதில்லை. அப்படி சினிமாவில் அதீத அன்பு வைத்திருப்பவர்கள் இன்னும் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் 90களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மதுபாலா. தமிழில் அழகன் படத்தில் அறிமுகமானாலும் மணிரத்னத்தின் ரோஜா படம்தான் அவரை பெரிய இடத்திற்கு அழைத்து சென்றது.
இதையடுத்து படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த மதுபாலா 1999ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சில படங்களில் நடித்து பின் குழந்தை பிறந்த பிறகு சில காலம் இடைவெளிவிட்டார். பின்னர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து தலைவி படத்தில் நடித்தும் வருகிறார்.
தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் கமிட்டாகியும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 52 வயதான மதுபாலா இளமையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். நம்ம ரோஜா நடிகையா இது என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.



