ரவிந்தரால் முதல் மனைவிக்கு ஏற்பட்ட பிரச்சனை.. மகாலட்சுமிக்கும் இதே பிரச்சனையாம்...
பிரபல லிப்ரா நிறுவனத்தின் தயாரிப்பாளராக ரவிந்தர் சந்திரசேகர் கடந்த வாரம் சீரியல் நடிகை மகாலட்சுமியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இணையத்தில் விமர்சிக்கப்பட்டு ட்ரெண்டானது.
திருமணம் பற்றி விளக்கங்களை பல ஊடகங்களுக்கு பேட்டியளித்து பகிர்ந்து கொண்டனர். ஹானிமூன், குலதெய்வ பூஜை என்று காதல் ஜோடிகள் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், ரவிந்தரின் தொழில் தான் எனக்கு பிரச்சனையாக இருப்பதாகவும் தயாரிப்பாளராக இருந்ததால் தான் அவரை திருமணம் செய்து கொண்டதை பெரியதாக்கிவிட்டார்கள்.
அந்த தொழிலில் இல்லை என்றால் இந்த பிரச்சனை விமர்சனம் வந்திருக்காது என்று மகாலட்சுமி சமீபத்திய பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
இதேபோல் தான் ரவிந்தரின் முதல் மனைவியும் அவரின் தொழில் பிடிக்கவில்லை என்று அவரை விட்டு சென்றுவிட்டதாக ரவிந்தரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதையெல்லாம் உடைத்து மகாலட்சுமி அவருடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.