மகாலட்சுமியின் கணவரை தட்டித்தூக்கிய பிக்பாஸ் 8.. ஃபேட் மேனுக்கு வந்த லக்..
Vijay Sethupathi
Vijay Television
Ravindar Chandrasekaran
Mahalakshmi
Bigg Boss Tamil 8
By Jai
இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி துவங்கவுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்போகும் பிக்பாஸ் 8ல் யார் யார் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற கேள்வியும் யூகங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.

சிலர் போட்டியாளர்களின் பெயரை லீக் செய்தும் வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்ப்பார்த்திராத ஒரு போட்டியாளரின் பெயர் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விமர்சித்தும் படங்களை தயாரித்தும், நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தும் பிரபலமான ஃபேட் மேன் என்று அழைக்கப்படும் ரவீந்தர் பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்துக்கொள்ளப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
