டிரான்ஸ்பெரண்ட் சேலையில் மயக்கும் போஸ்!! சீரியல் நடிகை மகாலட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோஸ்
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ஆரம்பித்து தற்போது சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
மகனுடன் வாழ்ந்து வந்த மகாலட்சுமி இடையில் சீரியல் நடிகை ஈஸ்வருடன் காதலில் இருந்து சர்ச்சையில் சிக்கினார். ஈஸ்வரின் மனைவி பிரச்சனை செய்ததால் அவரைவிட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் மகாலட்சுமி.
அதன்பின் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரை இரு ஆண்டுகளாக ரகசிய காதலில் இருந்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். யாரும் எதிர்பார்க்காத மகாலட்சுமி - ரவீந்தர் திருமணம் பெரியளவில் பேசப்பட்டது.
விமர்சனங்களை காதில் போடாமல் சந்தோஷமாக வாழ்ந்து வரும் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். சீரியலில் தொடர்ந்து நடித்து வரும் மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் விளம்பரத்திற்காக புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார்.
தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையில் ரசிகர்களை வியக்க வைக்கும் போஸில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், ஒல்லியாக இருப்பதை பார்த்தும் ரசிகர்கள் ஹார்ட்டின் விட்டும் வருகிறார்கள்.