அந்த விசயத்தில் கணவருக்கு குறை வைக்காத மகாலட்சுமி! சந்தோஷத்தில் ரவீந்தர் வெளியிட்ட புகைப்படம்..
மகாலட்சுமி
சின்னத்திரை சீரியல் நடிகையாக பிரபல தொலைக்காட்சி சேனலில் பல தொடர்களில் நடித்து வருபவர் நடிகை மகாலட்சுமி. விஜேவாகவும் பணியாற்றி வந்த மகாலட்சுமி திருமணமாகி ஒரு மகன் இருக்கையில் சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வந்தார்.
அதன்பின் சில சர்ச்சைகளில் சிக்கிய மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பல விமர்சனங்களை சந்தித்து அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
மகாலட்சுமி சீரியலில் நடித்தும் ரவீந்தர் தயாரிப்பு, பிக்பாஸ் விமர்சனம் எனபிஸியாக இருந்து வருகிறார்.
டின்னர்
இதற்கிடையில் மனைவியுடன் அவுட்டிங், டின்னர் என்று நாட்களை கழித்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது ஞாயிற்று கிழமையில் மனைவியின் பாசத்தோடு அணைத்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரவீந்தர்.
ரொமான்ஸ்-ல் கணவருக்கு குறை வைக்காத மனைவி என்று மகாலட்சுமியை பாராட்டியும் வாழ்த்து கூறி கருத்துக்களையும் ரசிகர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.