திருமணத்திற்கு பின் மகாலட்சுமியின் ஒரு மாச சம்பளம் இத்தனை லட்சமா.. விளம்பரத்தால் உச்சத்தை தொட்ட ரவீந்தர் மனைவி
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளாராகவும் சீரியல் நடிகையாகவும் திகழ்ந்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி.
இரண்டாம் திருமணம்
சன் டிவி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த மகாலட்சுமி முதல் திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்து பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தார்.
அதன்பின் திருமணமாகி குழந்தை இருக்கும் சீரியல் நடிகர் ஈஸ்வருடன் ரகசிய தொடர்பில் இருந்து சர்ச்சைக்குள்ளாகினார். அதன்பின் சீரியல்களில் கவனம் செலுத்தி வந்த மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்தி தமிழ் சினிமாவையையே அதிரவைத்த நிலையில் திருமணம் குறித்து சில விளக்கங்களை ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து கூறி வருகிறார். திருமணம் முடிந்த 5 நாட்களில் மகாபலிபுரம் ரெசாட்டிற்கு ஹனிமுன் சென்றும் கோவிலுக்கு சென்று பூஜை செய்தும் வந்தனர்.
மகாலட்சுமி சம்பளம்
இந்நிலையில் மகாலட்சுமி திருமணத்திற்கு பின் மகாலட்சுமியின் மார்க்கெட் அதிகரிக்க சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளதாம். அப்படி மாதத்தில் 3 லட்சம் வாங்கி வந்த மகாலட்சுமி ஒரு லட்சத்தினை ஏற்றி 4 லட்சமாகவும் சம்பளம் வாங்கி சீரியலில் நடித்தும் வருகிறாராம்.
இதனை தவிர இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்தும் வருகிறார். அப்படி சேலை, ஆபரணப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், உணவுகள் என விளம்பரம் செய்து சைட் பிஸ்னஸ் செய்து வருகிறார். அப்படி திருமணத்திற்கு முன் அவரது சொத்து மதிப்பு 3 கோடியாக இருந்தது. தற்போது அதைவிட கொஞ்சம் அதிகரித்தும் உள்ளதாம்.