மாகாபா ஆனந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத விஜே பிரியங்கா!! என்ன காரணம்..
விஜய் விடியில் பல ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முதல் பல நிகழ்ச்சிகளை இன்று வரை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
பிரியங்காவின் திருமணம்
ஆனால் சமீபத்தில் விஜே பிரியங்காவின் திருமணத்திற்கு மாகாபா ஆனந்த் செல்லவில்லை. இதனை பலரும் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டு வந்தனர்.
மாகாபா ஆனந்தின் திருமண நாள் என்பதால் மாலத்தீவிற்கு சென்றுவிட்டார் அதனால் தான் செல்லவில்லை என்று கூறப்பட்டாலும், இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு திருமண வாழ்த்து மெசேஜ் கூட மாகாபா ஆனந்த் பதிவிடவில்லை.
மாகாபா ஆனந்த் பிறந்தநாள்
இந்நிலையில் மாகாபா ஆனந்த் பிறந்தநாள் கொண்டாடியுள்ள நிலையில், விஜய் டிவியை சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் விஜே பிரியங்கா, மாகாபாவிற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவும் போடவில்லை.
ஆனால் திருமணத்தில் எடுத்த வீடியோக்களை மட்டும் பிரியங்கா ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்று இருவரும் நிகழ்ச்சிக்காக மட்டும் இப்படி நட்பாக இருக்கிறார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
