மீண்டும் பழைய நிகழ்ச்சியை தூசி தட்டும் விஜய் டிவி.... என்ன ஷோ தெரியுமா
Tamil TV Shows
By Yathrika
புதிய ஷோ
விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. பாடல், நடனம், கேக் ஷோ என நிறைய வருகிறது, அந்த நிகழ்ச்சிகள் அனைத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
ஒரு காலத்தில் நாம் பார்த்து ரசித்த ஜோடி நடன நிகழ்ச்சி அண்மையில் புதியதாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் இன்னொரு பழைய நிகழ்ச்சியை விஜய் டிவி தூசி தட்டியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பெரிய ரீச் கொடுத்த அது இது எது என்ற நிகழ்ச்சியின் புதிய ஷோ மீண்டும் வர இருக்கிறதாம்.
அந்த நிகழ்ச்சிக்கான புதிய புரொமோ மாகாபா ஆனந்த் இடம்பெற வெளியாகியுள்ளது. இதோ அந்த கலகலப்பான புரொமோ,