திருமணமா.. நடிகை மாளவிகா மோகனன் கொடுத்த அதிர்ச்சி
பேட்ட படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து வரவேற்பை பெற்றார். இதன்பின், தனுஷுடன் ஜோடி சேர்ந்த மாளவிகா, மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், இன்று தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த நடிகை மாளவிகா " கூடிய விரைவில் இல்லை " என்று கூறியுள்ளார். திருமணம் குறித்த கேள்விக்கு மாளவிகா கூறியுள்ள இந்த பதில் வைரலாகி வருகிறது.
Hopefully not anytime soon https://t.co/QD3Ad7zdpW
— malavika mohanan (@MalavikaM_) May 18, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.