அந்த நடிகருடன் நானா? பிரபல நடிகரின் படத்தால் கடுப்பாகிய மாளவிகா மோகனன்...
பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா. படம் வெளியாகும் முன்பே பெரியளவில் பேசப்படு வந்த மாளவிகா மாஸ்டர் படத்தில் தகுந்த காட்சிகள் இல்லாததால் ஏமாற்றத்தை சந்தித்தார்.
இப்படத்திற்கு பிறகு க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்த மாளவிகா மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் நடித்தார். படம் ஓடிடி தளத்தில் வெளியாகி படுமோசமான விமர்சனத்தை பெற்றது. இதன்பின் வாய்ப்புகள் கிடைத்தும் ஒருசில படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
சமீபத்தில் டிவிட்டர் பக்கத்தில் லைவ் சாட்டில் ரசிகர்களுடன் பேசிய மாளவிகாவிடம் படுமோசமான கேள்விகளை கேட்டதற்கு பதிலடி கொடுத்தும் ரீப்ளே செய்தார். தற்போது மாளவிகா மோகனன் பாலிவுட் நடிகர் சல்மான் கான் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி ஒன்று பரவி வைரலானது.
இதை அறிந்த மாளவிகா போகனன், பொய்யான கட்டுரை என்றும் இதுபற்றி பலர் என்னிடம் தொடர்ந்து கேட்டு வந்ததால் இதை கூறியுள்ளேன் என்று பதிவினை போட்டுள்ளார்.
சல்மான் கான் படத்தில் நடிகை மாளவிகா சர்மா தான் நடிக்க கமிட்டாகியிருப்பது தான் இதன் உண்மையான செய்தி என இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
False article. Not true :) Putting it out here as a lot of people have been asking me if I’m doing this. pic.twitter.com/Dvj2gRw3n6
— malavika mohanan (@MalavikaM_) May 26, 2022