மாஸ்டர்பட நடிகை மாளவிகா தான் வேண்டும்! ஹாலிவுட்-பாலிவுட் நடிகையை தூக்கி எறிந்த சங்கர்..

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர்கள் பலர் இருந்து தென்னிந்திய சினிமாவில் முதல் வரிசையில் இருப்பவர் இயக்குநர் சங்கர். ரஜினிகாந்தினை வைத்து பல பிரம்மாண்ட படங்களை இயக்கி கோடிகளில் வசூல் எடுக்கும் இயக்குநர்.

சமீபகாலமாக தமிழ் நடிகர்களுக்கு ஏற்ற கதை எழுதினாலும் நடிக்க முன் வராததால் தெலுங்கு பக்கம் சென்றுள்ளார். 2.0விற்கு பிறகு தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து அடுத்த படத்தினை இயக்கவுள்ளார். இடையில் இந்தியன் 2 படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில் அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார் சங்கர்.

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ என்பவர் தயாரிக்கையில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாம். இப்படத்திற்காக இரு கதாநாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதற்காக பல நடிகைகளில் பெயர் அடிப்பட்டது. பாலிவுட்டின் கியாரா அத்வானி ஹாலிவுட்டின் சுஸி பே உள்ளிட்ட சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக தெரியவந்தது.

இந்நிலையில், கபாலி, மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை மாளவிகா மோகனனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் கசிந்துள்ளது. இப்படத்திற்கு பிறகு மாளவிகாவின் மார்க்கெட் எகிரும் என்றும் கூறி வருகிறார்கள்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்