லென்ஸ் போட்டு பிரச்சனை.. 5 மருத்துவர்களை சந்தித்த தங்கலான் பட நடிகை மாளவிகா மோகனன்.. காரணம் இதுதானாம்..
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள படம் தங்கலான். சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வது திருவேத்து உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பல எதிர்ப்பார்ப்புகள் மத்தியில் வெளியாகவுள்ள தங்கலான் படத்தின் வெளியீட்டிற்காக நடிகை மாளவிகா மோகனன் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்.
இப்படத்திற்காக ஒட்டு மொத்த படக்குழுவும் மிகவும் சிரமம்பட்டு உழைத்துள்ளனர். என் ரோல் மிகவும் கொடுரமானது என்பதால் எனக்கான மேக்கப் என்பது மிகவும் பார்த்து பார்த்து செய்யப்பட்டது.
குறிப்பாக என் கதாபாத்திரத்திற்கான மேக்கப் என்பது, தோற்றத்திற்கான மேக்கப்ம் டாட்டூ மேக்கப் (டாட்டூ போல் ஓப்பனை) பின் என் ஆடைகள் என இதற்கு கிட்டத்தட்ட 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ஷூட்டிங் இடத்தில் ஒரு குடை கூட எங்களுக்கு கிடையாது. மேக்கப் போடும் போது மிகவும் ஆர்மாக இருக்கும்.
நடிக்கும் போது ஆர்வத்துடன் இருந்தோம். கடும் வெயில், புழுதி, குப்பைகளுக்கு மத்தியில் நடிக்கும் போது எங்களுக்கு தெரியவில்லை. கடும் வெயிலால் எங்கள் உடல் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஹோட்டலுக்கு திரும்பிய பின் தான் எங்களுக்கு தெரியும்.
என் ரோலில் கண்களில் லென்ஸ் போட்டு நடிக்க வேண்டியிருந்ததால் என் கண்களில் பார்வை பிரச்சனை ஏற்பட்டது. முகத்தில் தோல் பிரச்சனை என்று இருந்ததால் ஷூட்டிங் மத்தியில் 5 மருத்துவர்களை சந்தித்தேன் என்று மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.